மும்பையில் அதிர்ச்சி சம்பவம் : 3 வயது குழந்தை மாடியில் இருந்து வீசி கொலை


மும்பையில் அதிர்ச்சி சம்பவம் : 3 வயது குழந்தை மாடியில் இருந்து வீசி கொலை
x
தினத்தந்தி 8 Sept 2019 7:23 AM IST (Updated: 8 Sept 2019 7:23 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 3 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து வீசி கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மும்பையில் மூன்று வயது பெண் குழந்தை இரக்கமின்றி 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததும் சம்பவ இடத்திலேயே அந்த பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் மும்பை, கொலாபா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. குழந்தையினுடைய தந்தையின் நண்பர் குழந்தையை 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.

அவரை கொலாபா பகுதி போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையை தூக்கி வீசி கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story