இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்ற பரப்புரை தவறானது: கிரண் பேடி விளக்கம்


இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்ற பரப்புரை தவறானது: கிரண் பேடி விளக்கம்
x
தினத்தந்தி 8 Sept 2019 8:30 PM IST (Updated: 8 Sept 2019 8:30 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்ற பரப்புரை தவறானது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படாத பிரச்சினை தொடர்ந்து சட்டசபையில் எழுப்பப்பட்டது. இலவச அரிசி வழங்குவதற்கான டெண்டருக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் முதல்-அமைச்சர்  நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழுவினர், துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு நேற்று பிற்பகல் சென்றனர். தொடர்ந்து அவர்கள் ஆளுநர் கிரண் பேடியை சந்தித்து பேசினர்.

பின்னர், வெளியே வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் அனைவரும் ஆளுநர் கிரண் பேடியை சந்தித்து பேசினோம். அப்போது, சட்டப்பேரவையில் இலவச அரிசி வழங்குவது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை அவரிடம் கொடுத்தோம். அரிசி வழங்க ஏற்கனவே அமைச்சர் கந்தசாமி அனுப்பிய கோப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். இதற்காக 6 மாதங்களுக்கு ரூ. 160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார்.

இந்நிலையில் புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இல்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இல்லை.  மக்கள் தரமான அரிசியை வாங்கிக்கொள்ள இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க கூறினேன். இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்ற பரப்புரை தவறானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story