தேசிய செய்திகள்

சென்னை விமானத்தில் பயணிக்கு மூச்சுத்திணறல் - ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாப சாவு + "||" + Passenger suffocates in Chennai flight - Miserable death on the way to the hospital

சென்னை விமானத்தில் பயணிக்கு மூச்சுத்திணறல் - ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாப சாவு

சென்னை விமானத்தில் பயணிக்கு மூச்சுத்திணறல் - ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாப சாவு
சென்னை விமானம் நடுவானில் சென்றபோது பயணி ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புவனேஸ்வர்,

சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு நேற்று ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நடுவானில் சென்றபோது அசோக்குமார் சர்மா (வயது 48) என்ற பயணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதுகுறித்து விமானி ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விமானம் உடனடியாக புவனேஸ்வரில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் டாக்டர்கள் தயார் நிலையில் இருந்தனர்.


விமானம் தரையிறங்கியதும் அசோக்குமாரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாலாறு கிராமத்திலுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கியாஸ் வெளியேற்றம்? மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
பழனி அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஒரு விதமான கியாஸ் வெளியேறுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.