தேசிய செய்திகள்

கேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிர்ப்பு + "||" + For Motor Vehicle Act In Kerala, Congress, Marxist anti

கேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

கேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
கேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
திருவனந்தபுரம்,

சாலை விதிகளை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை பெரும்பாலான மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. அதேநேரம் இந்த சட்டத்துக்கு சில மாநிலங்கள் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளன. அந்தவகையில் கேரளாவும் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.


அங்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை மோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘சாலை விபத்துகளை நிச்சயம் குறைக்க வேண்டும். அதற்கு ஏற்கனவே இருக்கும் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தினாலே போதும். அதிக அபராதங்கள் விதிப்பது ஊழலுக்கு வழிவகுக்கும். எனவே இந்த காரணிகளை பரிசீலித்து மோட்டார் வாகன சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

இதே கருத்தை வலியுறுத்திய மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, புதிய சட்டப்படி அதிக அபராதம் விதிக்கக்கூடாது என முதல்-மந்திரி பினராயி விஜயனை கேட்டுக்கொண்டார். மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என கூறியிருப்பது போல கேரளாவும் இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரள பல்கலைக்கழகத்தில் கவர்னருக்கு எதிராக போராட்டம்; பாதியிலேயே பேச்சை முடித்து திரும்பினார்
கேரள பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பேசிய கவர்னருக்கு, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கவர்னர் பாதியிலேயே பேச்சை முடித்தார்.
2. நாட்டின் வளர்ச்சி திட்டங்களை தடுக்காதீர்கள் : கேரளா, மேற்கு வங்காள முதல்-மந்திரிகளுக்கு அமித்ஷா வேண்டுகோள்
நாட்டின் வளர்ச்சி திட்டங்களை தடுக்காதீர்கள் என்று கேரளா மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரிகளுக்கு அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. கேரளாவில் மீண்டும் சம்பவம்: பள்ளி மைதானத்தில் மாணவனை பாம்பு கடித்தது
கேரளாவில் பள்ளி மைதானத்தில் மாணவன் ஒருவனை பாம்பு கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
4. கேரளாவை சேர்ந்த கவிஞர் அக்கிதமுக்கு ஞானபீட விருது
கேரளாவை சேர்ந்த கவிஞர் அக்கிதமுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
5. கேரளாவில் சாலை விபத்தில் 3 பேர் பலி
கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர்.