மத்திய பிரதேசத்தில் 32 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


மத்திய பிரதேசத்தில் 32 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2019 8:03 PM IST (Updated: 9 Sept 2019 8:03 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹர்தா, ஹோஷங்காபாத், நீமுச், மாண்ட்சூர், ரைசன், நர்சிங்பூர், செஹோர் மற்றும் ரத்லம் போன்ற மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பார்வானி, தாமோ, தேவாஸ், தார், இந்தூர், ராஜ்கர், விடிஷா மற்றும் உஜ்ஜைன் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

அகர், அலிராஜ்பூர், அசோக் நகர், பாலகாட், பைதுல், புர்ஹான்பூர், சிந்த்வாரா, குணா, ஜபல்பூர், காண்ட்வா, கார்கோன், மண்ட்லா, ஷாஜகான்பூர், சாகர் மற்றும் சியோனி மாவட்டங்களுக்கு எல்லோ அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் விழிப்புடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story