வங்கி மோசடி நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தல்
வங்கி மோசடி நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அல்லது வங்கி மோசடிகளில் ஈடுபட்டு விட்டு பலர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வது வாடிக்கையாகி விட்டது. வைர வியாபாரி நிரவ் மோடி, தொழிலதிபர் விஜய் மல்லையா போன்றோர் வங்கி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், வங்கி மோசடி குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க 147 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாரத ஸ்டேட் வங்கி, விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, வங்கி மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்குமாறு குடியுரிமைத்துறைக்கு பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை விடுத்து உள்ளது.
Related Tags :
Next Story