சிக்னல் மீறியதற்காக செல்லான் அனுப்ப மாட்டோம், ‘அன்பான விக்ரமே எங்களை தொடர்பு கொள்’ - நாக்பூர் போலீசார் நகைச்சுவை


சிக்னல் மீறியதற்காக செல்லான் அனுப்ப மாட்டோம், ‘அன்பான விக்ரமே எங்களை தொடர்பு கொள்’ - நாக்பூர் போலீசார் நகைச்சுவை
x
தினத்தந்தி 10 Sept 2019 2:21 AM IST (Updated: 10 Sept 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

அன்பான விக்ரமே எங்களை தொடர்பு கொள் என்றும், சிக்னல் மீறியதற்காக செல்லான் அனுப்ப மாட்டோம் என்றும் நாக்பூர் போலீசார் நகைச்சுவையாக தெரிவித்துள்ளனர்.

நாக்பூர்,

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கி சென்றபோது, அதாவது 2.1 கி.மீ. தூரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் நாடே சோகத்தில் ஆழ்ந்தது. பின்னர் மாயமான விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனுடன் தொடர்பு கொள்ள முயற்சி நடந்து வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார்.

இதற்கு மத்தியில் விக்ரம் லேண்டருக்கு மராட்டிய மாநிலம் நாக்பூர் போலீசார் தங்களது அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் கோரிக்கை விடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டனர்.

அதில், ‘அன்பான விக்ரம், தயவு செய்து எங்களை தொடர்பு கொள். நீ சிக்னல் மீறி சென்றதற்காக நாங்கள் உனக்கு செல்லான் அனுப்ப மாட்டோம்‘ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

விக்ரம் லேண்டருக்கு போலீசார் விடுத்த இந்த கோரிக்கை நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story