பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியுமா? - இந்திய கம்யூனிஸ்டு கேள்வி
பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியுமா என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 2-வது முறை பா.ஜனதா ஆட்சியமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அந்தவகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘காஷ்மீர் மாநிலம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் இருக்கிறது. அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம், பெருகி வரும் சகிப்புத்தன்மையற்ற செயல்கள், ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுதல், ஆர்.எஸ்.எஸ்.சின் பிரித்தாளும் திட்டங்கள் மற்றும் பொருளாதார மந்த நிலை போன்ற சிக்கல்களுக்கு மத்தியில் மத்திய அரசு எப்படி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியும்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தால் அசாமில் சுமார் 20 லட்சம் பேர் எதிர்காலத்தை இழந்திருப்பதாக கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்த பதிவேட்டை முன்வைத்து மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களை பா.ஜனதாவினர் மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறது.

Related Tags :
Next Story