காஷ்மீரில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு


காஷ்மீரில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2019 8:06 AM GMT (Updated: 10 Sep 2019 8:06 AM GMT)

காஷ்மீரின் பல இடங்களில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகளால், வதந்திகள் பரவி வன்முறை ஏற்படாமல் இருக்கும் நோக்கில்,  காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது,  படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மொகரம் பண்டிகையை முன்னிட்டு, மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மொகரம் பண்டிகையின்  போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதால், கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

காஷ்மீரின் வர்த்தக முனையம் என்று அழைக்கப்படும் லால் சவுக்  மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் முற்றிலும் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.   பள்ளத்தாக்கு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story