நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தன்னையே அர்ப்பணித்தவர் அருண் ஜெட்லி: பிரதமர் மோடி புகழாரம்
நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தன்னையே அர்ப்பணித்தவர் அருண் ஜெட்லி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே, முன்னாள் நிதி மந்திரி மறைந்த அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்நிலையில், மறைந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு நினைவேந்தல் கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. அப்போது அருண் ஜெட்லி படத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி,
நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தன்னையே அர்ப்பணித்தவர் அருண்ஜெட்லி, அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. மறைந்த அருண் ஜெட்லி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்று பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக அருண் ஜெட்லி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story