தேசிய செய்திகள்

காஷ்மீர் மாநிலத்தை பிரிப்பதற்கு 3 நபர் குழு - மத்திய அரசு அமைத்தது + "||" + 3 person group to divide Kashmir - Central government set up

காஷ்மீர் மாநிலத்தை பிரிப்பதற்கு 3 நபர் குழு - மத்திய அரசு அமைத்தது

காஷ்மீர் மாநிலத்தை பிரிப்பதற்கு 3 நபர் குழு - மத்திய அரசு அமைத்தது
காஷ்மீர் மாநிலத்தை பிரிப்பதற்கு 3 நபர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
புதுடெல்லி,

மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்துசெய்ததுடன், அந்த மாநிலத்தை பிரித்து காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் என அறிவித்தது. மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்காக 3 நபர் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


முன்னாள் ராணுவ செயலாளர் சஞ்சய் மித்ரா தலைமையிலான அந்த குழுவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல், ஓய்வுபெற்ற ஐ.சி.ஏ.எஸ். அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த குழு நிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கான எல்லை வரையறை ஆகியவை குறித்து ஆய்வு செய்யும். இந்த குழு உடனடியாக பணிகளை தொடங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: 2 மாத ரகசிய நடவடிக்கை - சாதித்து காட்டிய அமித்ஷா
காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாக, 2 மாத ரகசிய நடவடிக்கையின் மூலம் அமித்ஷா சாதித்து காட்டிய விவரம் வெளியாகி உள்ளது.
2. காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நீடிப்பு: அமித்ஷா அவசர ஆலோசனை - நாடாளுமன்றத்தில் இன்று பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நீடிப்பதால், அங்குள்ள நிலவரம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று காஷ்மீர் பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
3. காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கவர்னருடன் அமித்ஷா ஆலோசனை
காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து அம்மாநில கவர்னருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
4. தியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிப்பதில் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
தியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிப்பதில் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...