வேலையின்மை புள்ளிவிவரங்கள் தவறானது, யாரும் வேலைகளை இழக்கவில்லை -மத்திய மந்திரி
வேலையின்மை புள்ளிவிவரங்கள் தவறானது, யாரும் வேலைகளை இழக்கவில்லை என மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறி உள்ளார்.
போபால்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-
உள்கட்டமைப்பு மேம்பட்டு வருகிறது, பெரிய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் முதலீடு செய்கின்றன. விவசாய உற்பத்தி மேம்பட்டுள்ளது மற்றும் முத்ரா திட்டத்தின் கீழ் கோடி மக்கள் கடன் பெறுகின்றனர். வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.வேலையின்மை புள்ளிவிவரங்கள் தவறானது, யாரும் வேலைகளை இழக்கவில்லை .
மேலும் நிலைமையை மேம்படுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரம் வலுவானதாக தொடர்ந்து இருக்கும்.
மற்ற நாடுகள் அனைத்தும் சந்திரனின் வட துருவத்தில் கவனம் செலுத்தியுள்ள நிலையில், இந்தியா தனது லேண்டரை தென் துருவத்திற்கு அருகே தரையிறக்க முயன்றது. லேண்டர் விக்ரம் மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ தூரத்தில் இருந்தபோது, அது இணைப்பை இழந்தது மற்றும் தகவல்தொடர்பு துண்டிக்கபட்டு உள்ளது. ஆனால் சுற்றுப்பாதையில் உள்ள விண்கலம் தொடர்ந்து சிக்னல்களை அனுப்புகிறது. சந்திரனின் பல புகைப்படங்களையும் புதிய தகவல்களையும் அது வழங்கும்.
நமது விஞ்ஞானிகள் தயார்நிலையுடனும், துல்லியத்துடனும் சந்திரயான்-2 வெற்றிக்கு தங்களால் முடிந்தவரை முயற்சி செய்துள்ளனர் என கூறினார்.
மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் மீது உள்ள சீக்கிய எதிர்ப்பு கலவர வழக்குகளின் விசாரணைகளை மீண்டும் மேற்கொள்ள மத்திய அரசு எடுத்த முடிவைப் பொறுத்தவரை, குற்றம் சாட்டப்படாத மக்கள் பயப்படக்கூடாது. சிறப்பு விசாரணை அமைப்பு தனது விசாரணையை மேற்கொள்ளும் என கூறினார்.
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த மறுத்த மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு,
கடந்த இரண்டு-மூன்று நாட்களில் அபராதங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதை நீங்கள் பார்க்கலாம். ஏனென்றால், மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இதைப் புரிந்துகொள்கிறார்கள். இது மத்திய அரசை அல்லது மாநில அரசுகளை பற்றியது அல்ல, அனைவரின் பாதுகாப்பையும் பற்றியது என கூறினார்.
Related Tags :
Next Story