பிரதமர் மோடியின் புதிய முதன்மை செயலாளராக பி.கே. மிஷ்ரா நியமனம்


பிரதமர் மோடியின் புதிய முதன்மை செயலாளராக பி.கே. மிஷ்ரா நியமனம்
x
தினத்தந்தி 11 Sept 2019 2:43 PM IST (Updated: 11 Sept 2019 2:43 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் புதிய முதன்மை செயலாளராக பி.கே. மிஷ்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக இருந்து வந்த நிருபேந்திர மிஸ்ரா சமீபத்தில் தனது பதவியில் இருந்து விலகினார்.  அவரை 2 வாரங்களுக்கு அந்த பதவியில் தொடரும்படி மோடி கேட்டு கொண்டார்.

பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளராக பிரமோத் குமார் மிஷ்ரா இருந்து வருகிறார்.  அமைச்சரவை மந்திரி அந்தஸ்தினை வகித்து வந்த அவர், பிரதமரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  அவர் தனது புதிய பதவியை முறைப்படி இன்று ஏற்று கொண்டார்.

Next Story