தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு + "||" + Nehru's handling of the Kashmir issue was wrong - Ravi Shankar Prasad Accused

காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு என ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆமதாபாத்,

மத்திய பா.ஜனதா அரசின் 100 நாள் நிறைவை தொடர்ந்து குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது குற்றம் சாட்டினார்.


அவர் கூறுகையில், ‘காஷ்மீர் விவகாரத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட விதம் தவறு. காஷ்மீர் தொடர்பாக சர்தார் படேல் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் சரி. அந்த காலத்தில் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ஏற்படுத்தி வரலாற்று பிழையை செய்திருந்தனர். ஆனால் மகத்தான துணிச்சலுடன் அந்த சட்டப்பிரிவை நீக்கி நமது பிரதமர் மோடி வரலாற்று பிழையை சரி செய்து விட்டார்’ என்று தெரிவித்தார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை எனக்கூறிய ரவிசங்கர் பிரசாத், மாநிலம் முழுவதும் போடப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது பெரும்பாலான பகுதிகளில் விலக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகள் மாநாடு: சவுதி அரேபியா ஏற்பாடு
காஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகள் மாநாட்டுக்கு சவுதி அரேபியா ஏற்பாடு செய்துள்ளது.
2. காஷ்மீர் விவகாரம்; ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விடுத்த கோரிக்கையை திரும்ப பெற்றது சீனா
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை சீனா திரும்ப பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. காஷ்மீர் விவகாரத்தில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு நூலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு
காஷ்மீர் விவகாரத்தில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு, நூலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
4. இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவு
இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை பக்கத்து நாட்டில் இருந்துதான் வருகிறார்கள் என ஐரோப்பிய ஒன்றியம் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
5. வெள்ளைக்கொடி ஏந்தி வந்து மீட்டுச்சென்ற பாகிஸ்தான் வீரர்கள் - வைரலாகும் வீடியோவால் ராணுவத்துக்கு பாராட்டு மழை
காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பதிலடியில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை, சக ராணுவ வீரர்கள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்து மீட்டுச்சென்ற சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது.