தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு ரோசய்யா நேரில் வாழ்த்து


தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு ரோசய்யா நேரில் வாழ்த்து
x
தினத்தந்தி 12 Sept 2019 3:32 AM IST (Updated: 12 Sept 2019 3:32 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு, தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

ஐதராபாத்,

தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 8-ந்தேதி தெலுங்கானா கவர்னராக பதவி ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் முன்னாள் கவர்னராக இருந்த ரோசய்யா, கவர்னராக பொறுப்பேற்றுள்ள தமிழிசையை நேற்று கவர்னர் மாளிகையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பதவி காலத்தில் சிறப்பாக பணிபுரிய தமிழிசைக்கு வாழ்த்து கூறிய ரோசய்யா, தான் தமிழக கவர்னராக இருந்த காலத்தில் அங்கு தங்கி இருந்த நாட்களையும் நினைவு கூர்ந்தார். இந்தநிலையில் தன்னை சந்திக்க வரும்போது பூங்கொத்துகளை தவிர்க்கும்படியும், அதற்கு பதிலாக பள்ளி குழந்தைகளுக்கு பயன் பெறும் வகையில் நோட்டுகள், டைரிகள், குழந்தைகளுக்கான கதை புத்தகங்கள் ஆகியவற்றை கொண்டு வரும்படியும் கவர்னர் தமிழிசை மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story