சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில்ரமானி கொலீஜியத்தின் முடிவை மதிக்க வேண்டும் - அகில இந்திய வக்கீல்கள் சங்கம் அறிக்கை
மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றிய சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்தின் முடிவை, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி மதிக்க வேண்டும் என்று அகில இந்திய வக்கீல்கள் சங்கம் கூறி உள்ளது.
புதுடெல்லி,
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு ‘கொலீஜியம்’ (நீதிபதிகள் குழு) பணியிடமாற்றம் செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தஹில் ரமானி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
தலைமை நீதிபதி தஹில் ரமானியை பணியிடமாற்றம் செய்த முடிவை திரும்பப்பெறவேண்டும் என்று கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள அகில இந்திய வக்கீல்கள் சங்கம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்தின் முடிவை மதிக்க வேண்டும். கடந்த காலத்தில் அவர் கொலீஜியத்தின் முடிவால் பயன் அடைந்து இருக்கிறார். அவருடைய பணியிட மாற்றத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பது, யாராக இருந்தாலும் நியாயமான செயல் அல்ல. அவர் மும்பை ஐகோர்ட்டில் மூன்று முறை தற்காலிக தலைமை நீதிபதியாகவும், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
கொலீஜியம் அவருக்கு எதிராக எந்த புகாரையும் முன்வைக்கவில்லை என்னும் போது, கொலீஜியத்தின் கூட்டு முடிவை அவர் மதிக்க வேண்டும். அவர் மேகாலயா ஐகோர்ட்டையும், அதனுடன் தொடர்பு உடையவர்களையும் வேறுபடுத்தி பார்க்காமல், இந்த பணியிட மாற்றத்தை சரியான முறையில் ஏற்று மேகாலயா ஐகோர்ட்டில் பொறுப்பேற்று இருந்திருக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story