லடாக் அருகே இந்தியா-சீனா ராணுவம் மோதல்
லடாக் அருகே இந்தியா - சீனா ராணுவம் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
புதுடெல்லி,
ஜம்மு-காஷ்மீரை அடுத்த லடாக் அருகே எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள பாங்கோங் ஏரியைச் சுற்றியிருக்கும் பல பகுதிகளுக்கு இந்தியாவும், சீனாவும் உரிமை கோரி வருகின்றன. இந்நிலையில், பாங்கோங் ஏரி அருகே புதன்கிழமை காலையில் இந்திய ராணுவத்தினர் நடமாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களைக் கண்ட சீன ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறும்படி கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்து, இந்திய எல்லைக்குள்பட்ட பகுதியிலேயே தாங்கள் இருப்பதாக, இந்திய ராணுவத்தினர் கூறினர். மேலும், வெகுநேரம் அங்கேயே நடமாடிக் கொண்டிருந்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பின்னர், இரு தரப்பினரும் தங்கள் முகாம்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
Related Tags :
Next Story