தேசிய செய்திகள்

புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்படும் அபராத தொகையை தளர்த்தி உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை + "||" + Uttarakhand govt to ease fines imposed under new Motor Vehicle Act

புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்படும் அபராத தொகையை தளர்த்தி உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை

புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்படும் அபராத தொகையை தளர்த்தி உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை
புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்படும் அபராத தொகையை தளர்த்தி உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
டேராடூன்,

வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்த இந்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.

இந்த சட்டம் கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த அபராத உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசு, புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்படும் அபராத தொகையை சற்று தளர்த்தியுள்ளது. 

அதன்படி ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகை ரூ.5000-ல் இருந்து ரூ.2500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனர் உரிமம் பெற தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் வாகனம் ஓட்டி வந்தால், அவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.10,000-ல் இருந்து ரூ.5000 ஆக குறைத்துள்ளது.

அதிக வேகத்தில் செல்வோருக்கு ரூ.2000 அபராதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது உட்பட வேறு எந்த அபராத தொகையிலும் மாற்றம் செய்யவில்லை என உத்தரகாண்ட் அரசாங்கம் தெரிவித்துள்ளது. குஜராத் அரசாங்கம் நேற்று அபராதத்தை குறைத்த நிலையில் இன்று உத்தரகாண்ட் அரசு அபராத தொகையை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த ஆண்டு 4 லட்சம் பேர் ரெயிலில் ‘ஓசி’ பயணம் ரூ.16¼ கோடி அபராதம் வசூல்
கடந்த ஆண்டு 4 லட்சம் பேர் ரெயிலில் ‘ஓசி’ பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.16.33 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. முதல் ஒரு நாள் போட்டியில் நேரஅனுமதி கடந்து ஓவர் வீசிய இந்திய அணிக்கு 80% அபராதம்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நேரஅனுமதி கடந்து ஓவர் வீசிய இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 80% அபராதம் விதிக்கப்பட்டது.
3. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய உணவு வணிகர்களுக்கு ரூ.41 ஆயிரம் அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய உணவு வணிகர்களுக்கு ரூ.41 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
4. இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லருக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருக்கு அவரது சம்பளத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
5. சீனாவில் விமான என்ஜின் மீது நாணயங்களை வீசிய பயணி; ரூ.12 லட்சம் அபராதம்
சீனாவில் விமான என்ஜின் மீது நாணயங்களை வீசிய பயணிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.