பிற விளையாட்டு

தங்க மங்கை பி.வி.சிந்துவின் பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரை + "||" + Name of PV Sindhu Nominated for Padmabhushan Award

தங்க மங்கை பி.வி.சிந்துவின் பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரை

தங்க மங்கை பி.வி.சிந்துவின் பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரை
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் வெற்றி பெற்று வரலாறு படைத்த பி.வி.சிந்துவின் பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டெல்லி,

மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலை  உள்துறை அமைச்சகத்தின் பத்ம விருதுகள் கமிட்டியினருக்கு,  விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. 

இதன்படி பத்ம விபூஷண் விருதுக்கு மேரிகோம் பெயரும், பத்ம பூஷண் விருதுக்கு பி.வி.சிந்து பெயரும், பத்மஸ்ரீ விருதுக்கு வினேஷ் போகட், மாணிக்க பத்ரா, ஹர்மன்பிரீத் கவுர் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் ஏற்கனவே பத்மஸ்ரீ விருது பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

பத்ம விபூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆறு முறை உலகச்சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இந்த விருதைப் பெற்றால், நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷணை பெறும் 4-வது விளையாட்டு வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என குறிக்கோளாக இருந்தேன் - பி.வி.சிந்து
உலக மகளிர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெறுவதைத் தவிர வேறு எதை பற்றியும் யோசிக்கவில்லை என பி.வி.சிந்து கூறியுள்ளார்.