தேசிய செய்திகள்

காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு? + "||" + Congress Sources: Party to appoint 'preraks' as messengers to carry forward the party

காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு?

காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு?
காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள்  குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்,  காங்கிரசை வலுப்படுத்தவும், பல்வேறு பிரச்சினைகள், கருத்தியல் நிலைப்பாடுகள் குறித்த கட்சி தகவல்களை  முன்னெடுத்துச் செல்வதற்கும், காங்கிரஸைச் சுற்றியுள்ள எந்தவொரு கட்டுக்கதையை உடைப்பதற்கும்  மண்டலத்திற்கு 3 பேரை  பொறுப்பாளர்களாக  நியமிக்க கட்சி முடிவு செய்து உள்ளது. 

மண்டல வாரியாக மூன்று  பொறுப்பாளர்கள்  நியமிக்கப்படுவார்கள் என்றும் மூன்று பேரில், ஒரு  பெண் மற்றும் எஸ்சி / எஸ்டி / சிறுபான்மை / ஓபிசி பின்னணியைச் சேர்ந்தவர் இருப்பார். ஒவ்வொரு மண்டலமும் 4-5 மாவட்டங்களைக் கொண்டிருக்கும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.  

தொடர்புடைய செய்திகள்

1. ”சோனியா காந்தி கோழை”தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி
”சோனியா காந்தி கோழை” தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி குற்றம்சாட்டி உள்ளார்.
2. 8 மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது - காங்கிரஸ்
காங். பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் உட்பட 8 மாநிலங்களவைக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
3. காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது; ஜோதிர் ஆதித்யா சிந்தியா
காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது என்று ஜோதிர்ஆதித்யா சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
4. அமைச்சர் நமச்சிவாயம் திடீர் மாற்றம்: புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் நியமனம்
புதுவை காங்கிரஸ் தலைவராக இருந்த அமைச்சர் நமச்சிவாயம் மாற்றப்பட்டு புதிய தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி
டெல்லி வன்முறை: அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என ராகுல்காந்தி கூறி உள்ளார்.