மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கட்லாபுரா பகுதியில் உள்ள நதியில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு, விநாயகர் சிலையை கரைக்க சிலர் படகில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் சென்றவர்களில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மேலும் யாராவது நீரில் மூழ்கியிருக்க வாய்ப்பிருப்பதால் தொடர்ந்து தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த மேலும் தகவல்கள் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில மந்திரி பிசி சர்மா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story