தேசிய செய்திகள்

செடிகளை சாப்பிட்ட இரண்டு ஆடுகளை கைது செய்த போலீசார் + "||" + Two goats arrested in Telangana for eating saplings planted by govt

செடிகளை சாப்பிட்ட இரண்டு ஆடுகளை கைது செய்த போலீசார்

செடிகளை சாப்பிட்ட இரண்டு ஆடுகளை கைது செய்த போலீசார்
தெலுங்கானா மாநிலம் ஹுசுராபாத் பகுதியில் செடிகளை சாப்பிட்டதால் இரண்டு ஆடுகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளன.
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஹுசுராபாத் பகுதியில் 900 மரச்செடிகளை நட்டுள்ளனர். இந்த செடிகள் 'Save The Trees' என்ற தெலுங்கானா அரசாங்கத்தை சார்ந்த அமைப்பினரால் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் வளர்த்து வந்த செடிகள் தொடர்ந்து காணாமல் போவதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் செடிகளை வளர விடாமல், ஆடுகள் சாப்பிட்டு வந்ததால், கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் அந்த வழியாக வந்த இரு ஆடுகள் சுமார் 250 செடிகளை மேய்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக செடிகளை தொடர்ந்து நோட்டமிட்ட ஆடுகள் இன்று மீண்டும் செடிகளை சாப்பிட்டு கொண்டிருந்த போது கையும் களவுமாக காவல்துறையிடம் சிக்கியது. பின்னர் அந்த ஆடுகளை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதன்பிறகு ஆடுகளின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து, அவரிடம் ரூபாய் 1000 வசூலித்த நகராட்சி அதிகாரிகள் ஆடுகளை உரிமையாளரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து: கோடீஸ்வரியான பெண்
கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதன் மூலம் ஒருபெண் கோடீஸ்வரியாகி உள்ளார்
2. "உள்ள ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல" பிறந்தவுடனேயே மீம்ஸ் ஆன குழந்தை
பிறந்த குழந்தை ஒன்று, “உள்ளே ஒரே இருட்டு...ஒரு லைட்டு கூட இல்ல” என்கிறபடி மருத்துவரை பார்த்து முறைப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
3. சிறுவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி நாடு கடத்தலை எதிர்கொள்ளும் இந்திய ஆசிரியை
13 வயது சிறுவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி காதல் வலையில் விழ வைத்த ஜார்ஜியா நடுநிலைப்பள்ளி ஆசிரியை, நாடு கடத்தலை எதிர்கொள்ளலாம் என செய்தி வெளியாகியுள்ளது.
4. திருமணத்தை விட சிறையே சிறந்தது காதலி தொல்லையால் வேண்டுமென்றே திருடி சிறை சென்ற வாலிபர்
திருமண செய்துகொள்ள வற்புறுத்திய காதலியிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே திருடி வாலிபர் ஒருவர் சிறைக்குச் சென்று உள்ளார்.
5. மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் மீது பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து மறுபக்கம் வந்தது
இந்தோனேசியாவில் தனது பெற்றோருடன் மீன்பிடிக்கச் சென்ற ஒரு சிறுவன் மீது மீன் ஒன்று பாய்ந்ததால், அவர் தற்போது பரிதாப நிலையில் உள்ளார்.