இந்தியாவில் 16 கோடி முஸ்லிம்கள் பயமின்றி உள்ளனர் - ஆர். எஸ்.எஸ்.
இந்தியாவில் 16 கோடி முஸ்லிம்கள் பயமின்றி உள்ளனர் என ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால் கூறினார்.
புதுடெல்லி,
டெல்லியில் கல்வியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க ( ஆர். எஸ். எஸ்) இணை பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால் பேசியதாவது:-
இந்தியாவில் 16 கோடி முஸ்லிம்கள் பயமின்றி உள்ளனர். பார்சிகள், புத்தமதத்தினர் மற்றும் சமணர்கள் ஆகியோர் நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். இந்தியாவில் 50,000 பார்சிகள் உள்ளனர். சமணர்கள் 45 லட்சம் மற்றும் சுமார் 80 லட்சம் புத்தமதத்தினர் உள்ளனர். யூதர்கள் ஐந்தாயிரம் மட்டுமே. அவர்கள் யாருக்கும் பயப்படுவதில்லை.
முஸ்லிம்கள் 16 கோடிக்கும் அதிகமானவர்கள். பிறகு அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் அவர்களுக்கு யாரிடம் பயம். 600 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட சமூகம் அஞ்சும் ஒரு பெரிய கேள்வி இது. இதுபற்றி விவாதிக்கப்பட வேண்டும். "இது ஒரு பெரிய கேள்வி ஏன் முஸ்லிம்கள் பயப்படுகிறார்கள்" என்ற மனநிலை இருப்பது ஏன்.
‘வசுதைவ குட்டம்பகம்’ (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்) மற்றும் ‘சர்வே பவந்து சுகினா’ (எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்)” என்ற கொள்கைகளில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யவில்லை என கூறினார்.
Related Tags :
Next Story