தேசிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்கா பயணம் + "||" + Narendra Modi to visit U.S. from September 21

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்கா பயணம்

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்கா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி,

செப்டம்பர் 21 ந்தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி   செப்டம்பர் 27 ந்தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருடாந்திர  ஐநா பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பிரதமர்  நியூயார்க்கில் தொடர்ச்சியாக பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்  என வெளியுறவுத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ்  குமார் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் செப்டம்பர் 21-ந் தேதி மாலை  முதல் செப்டம்பர் 27-ந் தேதி மதியம் வரை இருக்கும். இந்த பயணத்தின் போது ஹூஸ்டனில் நடைபெறும் அமெரிக்க இந்தியர்கள் நடத்தும்  நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார்.

ஐநா பொதுச்சபையின் 74வது அமர்வில்,  பட்டியலின்படி பிரதமர் மோடி செப்டம்பர் 27-ந் தேதி காலை உரையாற்றுகிறார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆக்ராவில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லி வந்தடைந்தார்
ஆக்ராவில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெல்லி வந்தடைந்தார்.
2. பிரதமர் மோடியுடன் மத சுதந்திரம் பற்றி டிரம்ப் பேசுவார் - அமெரிக்கா தகவல்
நாளை இந்தியாவுக்கு வரும்போது, பிரதமர் மோடியுடன் மத சுதந்திரம் பற்றி டிரம்ப் பேசுவார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
3. விரைவான நீதியை வழங்க தொழில்நுட்பம் உதவும் - சர்வதேச நீதி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
விரைவான நீதியை வழங்க தொழில்நுட்பம் உதவும் என சர்வதேச நீதி மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.
4. "பசுமை பொருளாதாரத்தை" மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் -பிரதமர் மோடி
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கிய பங்கை ஆற்றும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
5. பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம் ; 30 -க்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி, தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு நாளை செல்கிறார்.