தேசிய செய்திகள்

நிரவ் மோடியின் சகோதரருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இண்டர் போல் + "||" + Interpol Arrest Warrant Issued Against Fugitive Nirav Modi's Brother

நிரவ் மோடியின் சகோதரருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இண்டர் போல்

நிரவ் மோடியின் சகோதரருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இண்டர் போல்
நிரவ் மோடியின் சகோதரருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை இண்டர்போல் பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 2 பில்லியன் டாலர் அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, தற்போது லண்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி நடைபெற்று வந்தது வெளிச்சத்திற்கு வந்ததும், நிரவ் மோடியின் குடும்பத்தினர் மற்றும் அவரது சகோதரர் நேஹல் தீபக் மோடி மற்றும் உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோர் இந்தியாவை விட்டு வெளியேறினர்.

 தப்பியோடியவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியில் அமலாக்கத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு  உள்ளது. இந்த சூழலில், அமலாக்கத்துறை கோரிக்கையின் பேரில், இண்டர்போல் அமைப்பு  நேஹல் தீபக் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.  இதன் மூலம், எந்த நாட்டில் இருந்தாலும்  நேஹல் தீபக் மோடியை கைது செய்ய முடியும். 

நேஹல் தீபக் மோடியும் அவரது குடும்பத்தினரும் நிரவ் மோடி  பண மோசடியில் ஈடுபடவும், ஆதாரங்களை அழிக்கவும் உதவியதாக  அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. பெல்ஜியம் நாட்டின் குடியுரிமை வைத்திருக்கும் நேஹல் தீபக் மோடி தற்போது நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. 27-ந் தேதிவரை நிரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு - லண்டன் கோர்ட்டு உத்தரவு
நிரவ் மோடிக்கு 27-ந் தேதிவரை காவல் நீட்டிப்பு செய்து லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு
கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிக்கிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
3. நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.