தேசிய செய்திகள்

அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி + "||" + respect all languages cultures equally mamata banerjee on hindi diwas2019

அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி

அனைத்து  மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி
அனைத்து மொழிகளையும், கலாச்சாரங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா, 

இந்தி மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, நாடுமுழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14 ம் தேதியான இன்று இந்தி நாள் கொண்டாடப்படுகிறது. 

இந்தி பேசும் மக்களுக்கு  மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  ”இந்தி திவாஸ் தினத்தை முன்னிட்டு இந்தி பேசும் மக்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைத்து  கலாச்சாரங்களையும் மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும். பல மொழிகளை நாம் கற்கலாம், ஆனால், நமது தாய்மொழியை ஒருபோதும் நாம் மறக்க கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக,  இந்தி நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், “ நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும். ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.  

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் உடனடியாக கடுமையான எதிர்வினைகளை ஆற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
2. பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை - மம்தா பானர்ஜி
பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
3. புலம்பெயர்ந்தோரை மாநிலத்திற்கு அழைத்து வர 105 கூடுதல் சிறப்பு ரெயில்கள்: மம்தா பானர்ஜி
புலம்பெயர்ந்தோரை அழைத்து வர 105 கூடுதல் சிறப்பு ரெயில்கள் விடப்படும் எனமேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
4. உள்துறை அமைச்சகத்தின் கண்டிப்புக்கு பிறகு மத்தியக்குழுவுக்கு மே.வங்க அரசு அனுமதி
உள்துறை அமைச்சகத்தின் கண்டிப்புக்கு பிறகு மத்தியக்குழுவுக்கு மேற்கு வங்காள அரசு அனுமதி அளித்தது.
5. மேற்குவங்கத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது - முதலமைச்சர் மம்தா பானர்ஜி
மேற்குவங்கத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.