2020 மார்ச் மாதம் மெகா ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடத்தப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


2020 மார்ச் மாதம் மெகா ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடத்தப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2019 10:41 AM GMT (Updated: 14 Sep 2019 10:41 AM GMT)

2020 மார்ச் மாதம் மெகா ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

பொருளாதார சூழல் குறித்து டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தொழில்துறைக்கு அதிக கடன்களை வழங்க பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சிறு சறுக்கலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்றுமதி பொருட்கள் மீதான கட்டணங்களை நீக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறைந்தளவு வரி செலுத்துவோர் செய்யும் சிறிய தவறுகளுக்காக தண்டிக்கப்பட மாட்டார்கள். ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை  எடுக்கும். 

நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் மிக பிரகாசமாக தெரிகின்றன. தொழில் நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

ஏற்றுமதிக்கு வங்கியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட காப்பீட்டுத் தொகையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  சிறுகுறு தொழில் துறையினருக்கு அதிக கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஜவுளி துறைக்கான புதிய திட்டம் 2020 ஜன.,1 ல் துவங்கப்படும்.  அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான அளவில் உள்ளது.

2020 மார்ச் மாதம் நாட்டின் 4 இடங்களில் மெகா ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story