ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலா பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் பாராட்டு
கோவையில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்று வரும் கமலா பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கோவை மாவட்டம் ஆலாந்துறை வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். இவர் கடந்த 30 வருடங்களாக அந்த பகுதியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
இதனையடுத்து, சமூக வலைதளங்களில் இந்த தகவல் வேகமாக பரவியது. தற்போது உள்ள சூழ்நிலையில் ரூ.1-க்கு இட்லி விற்பனை செய்யும் கமலாத்தாள் பாட்டியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். பலரும் அவருக்கு ஆதரவும், உதவியும், பாராட்டுகளையும் அளித்து வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கமலா பாட்டியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கமலா பாட்டிக்கு தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில்
தமிழ்நாடு வடிவேலம்பாளையம் பகுதியைச்சேர்ந்த 80 வயதான கமலாத்தாள், தினசரி கூலி தொழிலாளர்களுக்கு இட்லியை 1 ரூபாய்க்கு விற்கும் அவரின் உன்னத சேவைக்கு நான் தலை வணங்குகிறேன். மேலும் அவருடைய பணி அனைவரையும் ஊக்குவிப்பதாக உள்ளது. அவருக்கு எனது வணக்கங்கள்.. என்று பதிவிட்டுள்ளார்.
I salute 80 year old Smt Kamalathal from vadivelampalayam, #TamilNadu for her Noble service of selling Idlis at 1 rupee to daily wage workers.
— VicePresidentOfIndia (@VPSecretariat) September 14, 2019
Her story inspires one and all.
My salutations to her. pic.twitter.com/9oDcxJtD83
Related Tags :
Next Story