ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: படகில் சென்ற 33 பயணிகளின் கதி என்ன?
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து 33 பேர் மூழ்கியதாக தகவல் வெளியாகியள்ளது.
ஐதராபாத்,
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம தேவிபட்டணம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு ஒன்றில் 60 பேர் பயணம் செய்தனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
60 பேர் நீரில் மூழ்கிய நிலையில் 27 பேரை மீட்பு படையினர் மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 33 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களை தேசிய பேரிட மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். மீட்பு பணியில் 2 குழுக்கள் ஈடுபட்டுள்ளது.
Related Tags :
Next Story