கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்


கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 15 Sept 2019 6:29 PM IST (Updated: 15 Sept 2019 6:29 PM IST)
t-max-icont-min-icon

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவிபட்டிணம் அருகே உள்ள கண்டி போச்சம்மா கோயிலுக்கு ஆந்திர மாநில சுற்றுலாக் கழகம் சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது.

 அந்த வகையில், பாபிகொண்டலு பகுதியிலிருந்து 50 பயணிகள், 11 ஊழியர்களுடன்  படகு ஒன்று புறப்பட்டது, படகு கச்சளூரு பகுதியில் ஆற்றில் வந்தபோது, நிலைதடுமாறி திடீரென கவிழ்ந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தற்போது வரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புக்குழுவினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  ஆற்றில் படகு கவிழ்ந்து 11-பேர் இறந்த சம்பவத்துக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டுவிட்டரில்  பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஆற்றில் படகு கவிழ்ந்து மூழ்கிய செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவிக்கிறேன். துயர நிகழ்வு நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

Next Story