நாட்டில் வேலைவாய்ப்புக்கு பற்றாக்குறை இல்லை: மத்திய மந்திரி சந்தோஷ் கங்க்வார்


நாட்டில் வேலைவாய்ப்புக்கு பற்றாக்குறை இல்லை: மத்திய மந்திரி சந்தோஷ் கங்க்வார்
x
தினத்தந்தி 15 Sept 2019 8:30 PM IST (Updated: 15 Sept 2019 8:30 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் வேலைவாய்ப்புக்கு பற்றாக்குறையே இல்லை என்று மத்திய மந்திரி சந்தோஷ் கங்க்வார் தெரிவித்துள்ளார்.

லக்னோ, 

நாட்டில் பொருளாதார மந்த நிலை போன்ற சூழல் நிலவுவதாகவும், வேலையின்மை பிரச்சினை அதிகரித்து வருவதாகவும் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து,  மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத்துறை மந்திரி சந்தோஷ் கங்க்வார், கூறிய கருத்து  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மத்திய மந்திரி சந்தோஷ் கங்க்வார் கூறுகையில், “நாட்டில் வேலைவாய்ப்புக்கு பற்றாக்குறையே இல்லை. ஆனால் திறமையான நபர்கள்தான் இல்லை. தங்கள் நிறுவனங்களுக்கு திறமையான இளைஞர்களை தேடி வட இந்தியாவுக்கு செல்லும் அதிகாரிகள், அங்கு தங்கள் பணிக்கு தேவையான திறமையுள்ள நபர்கள் இல்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்’ என்று கூறினார்.


Next Story