தேசிய செய்திகள்

பேராசிரியருக்கு எதிராக பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம் + "||" + A series of students struggle at the University of Banaras against the professor

பேராசிரியருக்கு எதிராக பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம்

பேராசிரியருக்கு எதிராக பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம்
பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியருக்கு எதிராக பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வாரணாசி,

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் எஸ்.கே.சவுபேக்கு எதிராக மாணவிகள் சிலர் கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதனால் அவர் கடந்த அக்டோபர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


பின்னர் அவர் கடந்த ஜூன் மாதம் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டாலும், வகுப்பு எடுக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த தடையும் நீக்கப்பட்டதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் அவர் பாடம் நடத்தி வருகிறார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மாலையில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கல்லூரிக்கு வெளியே நடந்து வரும் இந்த போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்ததுடன், நேற்றும் நீடித்தது. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள், பாலியல் புகாரில் சிக்கிய அந்த பேராசிரியரை நீக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது
தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. கொல்கத்தாவில் டிரம்ப் வருகைக்கு எதிராக இடதுசாரிகள் பேரணி
கொல்கத்தாவில் டிரம்ப் வருகைக்கு எதிராக இடதுசாரிகள் பேரணி நடத்தினர்.
3. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் 30 நகரங்களில் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் 30 நகரங்களில் போராட்டம் நடந்தது.
4. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
5. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் தீா்மானம் நிறைவேற்றம்
கேரளா, பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.