”ஆ.எஸ்.எஸ். இல்லாமல் இந்துஸ்தான் இல்லை ” - ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஸ் பூனியா


”ஆ.எஸ்.எஸ். இல்லாமல் இந்துஸ்தான் இல்லை ” - ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஸ் பூனியா
x
தினத்தந்தி 16 Sept 2019 9:22 AM IST (Updated: 16 Sept 2019 9:22 AM IST)
t-max-icont-min-icon

”ஆ.எஸ்.எஸ். இல்லாமல் இந்துஸ்தான் இல்லை ” என்று ராஜஸ்தான் புதிய பாஜக தலைவர் சதீஸ் பூனியா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சாய்னி கடந்த ஜீன் 24-ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானர். இவரது மறைவையடுத்து ராஜஸ்தான் பாஜக தலைவர் பொறுப்பு காலியாக இருந்தது. 

இதனை அடுத்து, ஜெய்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.-வான சதீஸ் பூனியா கடந்த செப்டம்பர் 14-ஆம் நாளன்று ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் சதீஸ் பூனியா கூறியதாவது:-

இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது. நமது தேசம் மரியாதை மற்றும் சுய மரியாதையுடன் உலக வரைபடத்தில் பிரகாசமாக பிரகாசிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு நிறுவனம் அல்ல, மாறாக நாட்டையும் உலகத்தையும் மாற்றக்கூடிய ஒரு புரட்சி அமைப்பு.  ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இல்லை எனில் இந்துஸ்தான் இருந்திருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story