கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்


கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 16 Sept 2019 12:30 PM IST (Updated: 16 Sept 2019 12:30 PM IST)
t-max-icont-min-icon

கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

நேற்று, கோதாவரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்ததில், 13 பேர் பலி ஆனார்கள். மேலும், மாயமான 32 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த இடத்தை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

Next Story