நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத சூழல் உள்ளதா? அறிக்கை கோரியது உச்ச நீதிமன்றம்


நீதிமன்றத்தை  மக்கள்  அணுக முடியாத சூழல் உள்ளதா?  அறிக்கை கோரியது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 16 Sept 2019 1:07 PM IST (Updated: 16 Sept 2019 1:07 PM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத சூழல் உள்ளதா? என காஷ்மீர் உயர் நீதிமன்றம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்கள், அங்குள்ள உயர் நீதிமன்றத்தை அணுக முடியாத சூழல் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் குழந்தைகள் நல ஆர்வலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முறையிட்டார்.  

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உயர் நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத சூழல் நிலவினால், அது மிக மிக தீவிர பிரச்சினையாகும்.  அவசியம் ஏற்பட்டால் நானே ஜம்மு காஷ்மீர் செல்வேன்.  ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் இவ்விவகாரம் பற்றி தெளிவான அறிக்கை அளிக்க வேண்டும்” என்று கூறினார். 

மேலும்,  ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் அறிக்கை,  வழக்கறிஞரின் முறையீட்டுக்கு முரணாக இருந்தால், கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள மனுதாரர் தயாராக இருக்குமாறும் தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். 

Next Story