குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஒரே நாளில் 202 ஜோடிக்கு திருமணம்


குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஒரே நாளில் 202 ஜோடிக்கு திருமணம்
x
தினத்தந்தி 17 Sept 2019 12:45 AM IST (Updated: 17 Sept 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஒரே நாளில் 202 ஜோடிக்கு திருமணம் நடத்தப்பட்டது.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் குருவாயூரில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் கிருஷ்ணன் கோவிலில் அன்று ஒரே நாளில் மட்டும் 202 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று 701 குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.

Next Story