தேசிய செய்திகள்

போலீசுக்கு எதிராக சீக்கிய பெண் மொட்டையடித்து போராட்டம் + "||" + Sikh woman shaves head to seek arrest of father’s killers in jhansi

போலீசுக்கு எதிராக சீக்கிய பெண் மொட்டையடித்து போராட்டம்

போலீசுக்கு எதிராக சீக்கிய பெண் மொட்டையடித்து போராட்டம்
போலீசுக்கு எதிராக சீக்கிய பெண் மொட்டையடித்து போராட்டம் நடத்தினார்.
ஜான்சி,

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி நகரை சேர்ந்த சீக்கிய பெண் புனீத் சிங். அவருடைய தந்தை ஜோகிந்தர் சிங் (வயது 80). ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்துபோனார்.

தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவரை சொத்துக்காக தங்களது வீட்டு அருகே வசித்து வரும் இருவர் மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டனர் என்றும் போலீசில் புகார் தெரிவித்து இருக்கிறார். புகாரின் பேரில் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த புனீத் சிங், தனது தலையை மொட்டையடித்து கொண்டு போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.


மேலும் போலீசாரின் செயல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி மாவட்டத்தில் சோதனைச்சாவடிகளில் போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
தர்மபுரி மாவட்டம் தொப்பூர், காரிமங்கலம், காடுசெட்டிப்பட்டி ஆகிய சோதனைச்சாவடிகளில் போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா ஆய்வு மேற்கொண்டார்.
2. விழுப்புரம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள்: அமெரிக்கா அதிரடி
சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
4. சேலத்தில் உடல் எரிந்த நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
சேலத்தில் உடல் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. தனியார் நிறுவன ஊழியர் சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கார் ஏற்றி கொலையா? போலீஸ் விசாரணை
வில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் சாவில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரத்தில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.