ப.சிதம்பரத்துக்கு சிறை அதிகாரிகள், பிறந்தநாள் வாழ்த்து

x
தினத்தந்தி 17 Sept 2019 2:22 AM IST (Updated: 17 Sept 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

ப.சிதம்பரத்துக்கு சிறை அதிகாரிகள், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு நேற்று 74-வது பிறந்தநாள். அதையொட்டி, அவர் அடைக்கப்பட்டுள்ள 7-ம் எண் சிறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

ப.சிதம்பரம் தனது அறையை விட்டு வெளியே வந்தபோது, சக கைதிகளும் அவருக்கு வாழ்த்து கூறினர்.

“கைதிகளுக்கு அவரவர் பிறந்தநாளன்று வாழ்த்து கூறுவது வழக்கம். ப.சிதம்பரத்துக்கும் அதேபோல் வாழ்த்து கூறினோம்” என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிறந்தநாளையொட்டி, அவர் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

ப.சிதம்பரத்தை அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று சிறையில் சந்தித்தார்.

புதுடெல்லி, செப்.17-

Next Story