பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவை கைது செய்ததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவை கைது செய்ததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கும் தகவலை மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. இந்த சட்டத்தின் கீழ் எந்த ஒரு தனி நபரையும் விசாரணை எதுவும் இன்றி 2 ஆண்டுகள் காவலில் வைக்க முடியும்.
இந்த நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவை வீட்டு காவலில் வைத்து இருப்பதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம்நபி ஆசாத் கூறுகையில், முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவை பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டு காவலில் வைத்து இருப்பதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
காஷ்மீரில் இதுவரை இருந்த முதல்-மந்திரிகளும் மற்றும் காங்கிரஸ், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பயங்கரவாதத்துக்கு எதிராக தங்களால் முடிந்த அளவுக்கு போராடியதாகவும், அப்படி பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபட்டவர்களை வீட்டு காவலில் வைத்திருப்பது துரதிருஷ்டம் என்றும் அப்போது அவர் கூறினார்.

Related Tags :
Next Story