அமித்ஷா இந்தி பற்றிய கருத்தை வாபஸ்பெற வேண்டும் - பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்டு தலைவர் கடிதம்


அமித்ஷா இந்தி பற்றிய கருத்தை வாபஸ்பெற வேண்டும் - பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்டு தலைவர் கடிதம்
x
தினத்தந்தி 16 Sep 2019 10:30 PM GMT (Updated: 16 Sep 2019 9:25 PM GMT)

அமித்ஷா தனது இந்தி பற்றிய கருத்தை வாபஸ்பெற வேண்டும் என பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்டு தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் பினாய் விஸ்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நவீன இந்தியாவை உருவாக்கியதில் இந்தி மொழிக்கு உள்ள முக்கியத்துவத்தை யாரும் மறுக்கவில்லை. இந்தி மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க ஒரே வழி என்று கூறுவது உண்மை நிலவரம் தெரியாமல் நமது கண்களை மூடிக்கொள்வது போலாகும். தேச ஒருங்கிணைப்புக்கு மகத்தான பங்காற்றிய மற்ற இந்திய மொழிகளை அவமதிக்கும் செயல்.

நாட்டின் உள்துறை மந்திரி நமது அரசியல்சாசனத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது. இது மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான தந்திரம். இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், இந்தி மொழி பற்றிய கருத்தை திரும்பப்பெறும்படியும் அமித்ஷாவுக்கு நீங்கள் ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story