தேசிய செய்திகள்

இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் + "||" + "Lot Of Progress Made": Donald Trump Says Will Meet PM Modi, Imran Khan

இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
இந்தியா , பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரை விரைவில் சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.  மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலிருந்த பதற்ற சூழ்நிலை தணிந்துள்ளதாக கூறியுள்ளார். 

வரும் ஞாயிற்றுக் கிழமை, அமெரிக்காவின் டெக்சாஸுக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ‘ஹவுடி, மோடி' என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்கிறார்.  இந்த சூழலில், டிரம்ப் இரு நாட்டு தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.  இம்ரான் கானை எங்கு சந்திப்பார் என்ற தகவலை டிரம்ப் வெளியிடவில்லை.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது:- “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நான் விரைவில் சந்திக்க உள்ளேன். அதேபோல இந்திய பிரதமரையும் பார்ப்பேன். இரு நாட்டுக்கும் இடையில் தற்போது சூழல் நன்றாக முன்னேறியுள்ளது”  என்றார். 

இந்த மாத இறுதியில் நியூயார்க் நகரில், ஐ.நா சபைக் கூட்டம் நடக்க உள்ளது. அப்போது இம்ரான் கானை, ட்ரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  ஹவுடி மோடி நிகழ்ச்சி வரும் 22 ஆம் தேதி ஹூஸ்டன் நகரில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடியுடன் டிரம்பும் கலந்து கொள்கிறார். இந்திய வம்சாவளியினர் 50 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான் -அமெரிக்கா குற்றச்சாட்டு
பாகிஸ்தான் கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.
2. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - அயதுல்லா அலி காமேனி
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் அவை ஈரான் சரணடைய காத்திருக்கின்றன என ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கூறி உள்ளார்.
3. பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்தித்தார்.
4. அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு
மீண்டும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு விடுத்து உள்ளார்.
5. பெங்களூரு சர்ச்தெருவில் சுவர்கள், கடை ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான வாசகங்கள்
பெங்களூரு சர்ச்தெருவில் உள்ள சுவர்கள், கடைகளின் ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.