குஜராத்: சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டார் பிரதமர் மோடி
குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
அகமதாபாத்,
பிரதமர் நரேந்திர மோடி தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள் பலர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
பிறந்த நாளான இன்று பிரதமர் மோடி தனது நேரத்தை சொந்த மாநிலமான குஜராத்தில் செலவிடுகிறார். நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியா நகருக்கு வந்த மோடியை, கவர்னர், முதல்வர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, அங்கிருந்து, கல்வானி சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட்டார். இதன் பின்னர், சர்தார் சரோவர் அணையையும் பார்வையிட்டார். நர்மதா அருகே பட்டாம்பூச்சிகளை பிரதமர் மோடி பறக்க விட்டார்.
#WATCH Prime Minister Narendra Modi at the Butterfly Garden in Kevadiya, Gujarat. pic.twitter.com/iziHRcMJVq
— ANI (@ANI) September 17, 2019
தொடர்ந்து, குருதேஸ்வர் கோவில், குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்காவிற்கு செல்ல உள்ள மோடி, பொதுக் கூட்டம் ஒன்றிலும் உரையாற்ற உள்ளார். தனது தாயார் ஹீராபென்னையும் சந்தித்து ஆசி பெற உள்ளார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார்.
Related Tags :
Next Story