‘பொருளாதார மந்தநிலை’மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்: பிரியங்கா காந்தி
பொருளாதார மந்த நிலையை மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டன் என்று சொல்வதற்கு பதிலாக, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்று பியூஷ் கோயல் கூறியதை சமூக ஊடங்களில் ஏராளமானோர் கிண்டல் செய்து ட்ரோல் செய்தார்கள்.
பியூஷ் கோயல் பேசியதைக் குறிப்பிட்டும், ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சரிவுக்கு மக்கள் ஓலா, உபர் வாகனத்தை நாடியதே காரணம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதை குறிப்பிட்டும் பிரியங்கா காந்தி, கடந்த 13-ம் தேதி டுவிட்டரில் பதிவிட்டார். அதில், கிரிக்கெட்டில் நல்ல கேட்ச் பிடிக்க, பந்தின் மீது கவனமாக இருப்பது முக்கியம், விளையாட்டிலும் உண்மையான உற்சாகத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், புவியீர்ப்பு விசை, கணிதம், ஓலா-உபர் என்றுதான் குறை சொல்லுவோம். இந்திய பொருளாதாரத்தின் நலனுக்காக சொல்கிறேன்" எனத் கூறியிருந்தார்.
கடந்த 13-ம் தேதி பிரியங்கா காந்தி பதிவு செய்த டுவீட் பரவலாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், பிரியங்கா காந்தி தமது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பது:-
பொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம் ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். பொருளாதார தேக்கநிலை இன்னுமொரு ஆட்டோமொபைல் நிறுவனத்தை தாக்கியுள்ளதாகவும், இன்னும் அதிகமானோர் வேலையிழப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பொருளாதார மந்தநிலை குறித்து பிரியங்கா காந்தி பேசியும், டுவீட் செய்தும் வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story