அதிநவீன அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி - ராஜ்நாத் சிங் பாராட்டு


அதிநவீன அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி - ராஜ்நாத் சிங் பாராட்டு
x
தினத்தந்தி 17 Sept 2019 11:19 PM IST (Updated: 17 Sept 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அதிநவீன அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதற்கு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வர்,

இந்திய விமானப்படையின் பயன்பாட்டிற்காக, சுகோய் 30 எம்.கே.ஐ. ஜெட் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்த ஏவுகணை, 70 கி.மீ தொலைவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இலக்கை மணிக்கு 5,555 கி.மீ வேகத்தில் சென்று  துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். இந்த ஏவுகணையில் உள்ள ரேடார்கள், எலக்ட்ரோ ஆப்டிகல் டிராகிங் சிஸ்டம் மற்றும் சென்சார்கள், இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் திறன் பெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அஸ்திரா ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செய்த விமானப்படையினருக்கும், டி.ஆர்.டி.ஓ. குழுவுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

Next Story