பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்துக்கு ரூ.2 கோடி அபராதம்


பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்துக்கு ரூ.2 கோடி அபராதம்
x
தினத்தந்தி 18 Sept 2019 1:28 AM IST (Updated: 18 Sept 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்துக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

கவுகாத்தி,

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) அசாம் மாநிலம் கவுகாத்தியில் 6 எண்ணெய் கிணறுகளை தோண்டி இருக்கிறது. அவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் அமையவில்லை. சுற்றுச்சூழல் தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் அமைந்து இருப்பதாக புகார் எழுந்தது.

இதனால் இந்நிறுவனத்தின் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு குழுவை அமைத்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் எண்ணெய் நிறுவனம் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காகவும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை மீறியதற்காகவும் ரூ.2 கோடியே 4 லட்சத்து 90 ஆயிரத்தை அபராதமாக விதித்தது.

Next Story