சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கேரளா கோர்ட்டுகள் கட்டுப்பட்டவை


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கேரளா கோர்ட்டுகள் கட்டுப்பட்டவை
x
தினத்தந்தி 18 Sept 2019 1:35 AM IST (Updated: 18 Sept 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கேரளா கோர்ட்டுகள் கட்டுப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கேரளாவில் மலங்கரா கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனை நடத்துவது தொடர்பான ஒரு வழக்கில் 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அந்த உத்தரவுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டு வேறு ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, கேரளாவும் இந்தியாவின் ஒரு பகுதி தான், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு அங்குள்ள கோர்ட்டுகள் கட்டுப்பட்டவை என்று ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதில், ‘கேரளாவில் உள்ள கோர்ட்டுகள் எதிர்காலத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையோ, தீர்ப்பையோ மீறினால் தீவிரமாக கவனிக்கப்படும். இந்த உத்தரவை கேரளாவில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் அனுப்ப வேண்டும். மேற்கூறிய பிரச்சினை தொடர்பாக இன்னும் எத்தனை மனுக்கள் அங்குள்ள கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன என்றும், கேரள ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் 3 மாதங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும்’ கூறப்பட்டுள்ளது.


Next Story