பரூக் அப்துல்லா கைதுக்கு ப.சிதம்பரம் கண்டனம்


பரூக் அப்துல்லா கைதுக்கு ப.சிதம்பரம் கண்டனம்
x
தினத்தந்தி 18 Sept 2019 3:45 AM IST (Updated: 18 Sept 2019 3:02 AM IST)
t-max-icont-min-icon

பரூக் அப்துல்லா கைதுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “பரூக் அப்துல்லா சிறைவைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். காஷ்மீர் தலைவர்களில், ஒன்றுபட்ட இந்தியா என்னும் கொள்கைக்கு பரூக் அப்துல்லாவை போல் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள், வேறு யாரும் இல்லை” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Next Story