தேசிய செய்திகள்

நாட்டில் வகுப்புவாத சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது - மாயாவதி குற்றச்சாட்டு + "||" + Mayawati accuses Congress of enabling communal forces

நாட்டில் வகுப்புவாத சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது - மாயாவதி குற்றச்சாட்டு

நாட்டில் வகுப்புவாத  சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது - மாயாவதி குற்றச்சாட்டு
நாட்டில் வகுப்புவாத சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டி மாயாவதி டுவிட் செய்து உள்ளார்.
புதுடெல்லி

உத்தரபிரதேச முன்னாள் முதல் - மந்திரியும் ,  பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி நாட்டில் வகுப்புவாத  சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டி  டுவிட் செய்து உள்ளார்.

மாயாவதி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியின் இரட்டை  நிலைபாட்டால் நாட்டில் "வகுப்புவாத சக்திகள்" வலுவடைந்து வருகின்றன.  ஏனெனில் வகுப்புவாத சக்திகளை பலவீனப்படுத்துவதற்கு பதிலாக, காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் சக்திகளை பலவீனப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும், ” என கூறி உள்ளார்.

ராஜஸ்தானில்  பகுஜன் சமாஜ்  கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேர் காங்கிரசுக்கு முகாம் மாறிய உடனேயே,  மாயாவதி  நேற்று  காங்கிரஸ் ஒரு நம்பத்தகாத கட்சி  என கூறி இருந்தார்.

இது பகுஜன் சமாஜ் கட்சியை  காட்டிக் கொடுக்கும் செயலாகும்,  பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் அரசாங்கத்திற்கு  வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வந்தது. காங்கிரஸ் தனது எதிர்க்கட்சிகளுடன் சண்டையிடுவதற்கு பதிலாக, அதை ஆதரிக்கும் கட்சிகளை மட்டுமே காயப்படுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். 

"இது காங்கிரஸை எஸ்சி எதிர்ப்பு, எஸ்டி எதிர்ப்பு மற்றும் ஓபிசி எதிர்ப்பு கட்சியாக ஆக்குகிறது, மேலும் இந்த குழுக்களின் இடஒதுக்கீடு உரிமைகள் குறித்து இது ஒருபோதும் தீவிரமாகவும், நேர்மையாகவும் காங்கிரஸ் இருந்ததில்லை" என்று அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்: மாயாவதி
ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
2. புலம் பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்பும் விவகாரத்தில் அரசியல் செய்வதா? மாயாவதி கடும் விமர்சனம்
புலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கும் திருப்பி அனுப்பி வைக்கும் விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ், பாஜகவை மாயாவதி கடுமையாக சாடினார்.
3. உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்-மாயாவதி வற்புறுத்தல்
உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.