தேசிய செய்திகள்

மராட்டிய சட்டசபை தேர்தல்: பாதிக்கு பாதி இடம் இல்லை என்றால் கூட்டணி முறிவு பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை + "||" + Respect 50 50 formula or the alliance could break Shiv Sena warns BJP

மராட்டிய சட்டசபை தேர்தல்: பாதிக்கு பாதி இடம் இல்லை என்றால் கூட்டணி முறிவு பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை

மராட்டிய சட்டசபை தேர்தல்: பாதிக்கு பாதி இடம் இல்லை என்றால் கூட்டணி முறிவு பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை
மராட்டிய சட்டசபை தேர்தலில் பாதிக்கு பாதி இடம் இல்லை என்றால் கூட்டணி உடைக்கக்கூடும் என சிவசேனா பாஜகவை எச்சரிக்கிறது.
மும்பை

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வேண்டுமானலும் வெளியாக உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசும் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. இரு அணிகளும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில்  நேற்று மராட்டிய  அரசில் மந்திரியாக  இருக்கும் சிவசேனா தலைவர் ரோட்டே கூறும் போது பாஜகவால் சேனாவுக்கு சம எண்ணிக்கையிலான இடங்கள் வழங்கப்படாவிட்டால், சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான தேர்தலுக்கு முந்தைய கூட்டணி முறிந்து போகக்கூடும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து சிவசேனா தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவுத் இன்று கூறியதாவது:-

வரவிருக்கும் மராட்டிய சட்டசபை  தேர்தலில் போட்டியிட சிவசேனாவுக்கு சரி பாதி  இடங்களை வழங்கத் தவறினால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள  கட்சி கவலைப்படாது.

"அமித் ஷா மற்றும் மராட்டிய  முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் முடிவு செய்யப்பட்ட ஐம்பதுக்கு ஐம்பது என்ற பார்முலாவை பாஜக மதிக்க வேண்டும். நான் கூட்டணியை முறிப்பதைப் பற்றி பேசவில்லை, ஆனால் திவாகர் ரோட்டே கூறியது தவறல்ல என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய அரசியல் நிலவரம்: சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
2. பாஜகவின் மூத்த தலைவர் அத்வானிக்கு 92-வது பிறந்தநாள்: பிரதமர் நேரில் வாழ்த்து
பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி 92-வது பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
3. ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் சூழலை பாஜக உருவாக்குகிறது: சிவசேனா விமர்சனம்
ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் சூழலை பாஜக உருவாக்குகிறது என்று சிவசேனா விமர்சித்துள்ளது.
4. மராட்டியத்தில் பட்னாவிஸ் தான் முதல்வர்; சிவசேனா ஆதரவை விரைவில் பெறுவோம்- நிதின் கட்காரி
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தலைமையில் மராட்டியத்தில் பாஜக-சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் அதற்கு சிவசேனா ஆதரவு அளிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
5. மேலும் ஒரு திருவள்ளுவர் சிலை அவமதிப்பு ; பாஜகவினர் சுத்தம் செய்து பூஜை செய்தனர்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மேலும் ஒரு திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. பாஜகவினர் சுத்தம் செய்து பூஜை செய்தனர்.