அசாம் குடிமக்களின் பட்டியலில் "பல உண்மையான வாக்காளர்கள் வெளியேற்றம்" - அமித்ஷாவிடம் மம்தா பானர்ஜி புகார்


அசாம் குடிமக்களின் பட்டியலில் பல உண்மையான வாக்காளர்கள் வெளியேற்றம் - அமித்ஷாவிடம் மம்தா பானர்ஜி புகார்
x
தினத்தந்தி 19 Sep 2019 9:17 AM GMT (Updated: 19 Sep 2019 9:39 AM GMT)

அசாம் குடிமக்களின் பட்டியலில் "பல உண்மையான வாக்காளர்கள்" வெளியேற்றப்பட்டதாக அமித்ஷாவுடனான சந்திப்பில் மம்தா பானர்ஜி கோரிக்கை மனு அளித்தார்.

புதுடெல்லி

புதுடெல்லிக்கு  மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து மம்தா பானர்ஜி கூறும் போது, இது  மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இடையிலான  சந்திப்பு  என்றும் விவாதம் பெரும்பாலும் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும்  பிரச்சினைகள் குறித்தே இருந்ததாகவும் கூறினார்.

மம்தா பானர்ஜி இன்று  உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது  மேற்கு வங்கத்தின் பெயரை “பங்களா” என மாற்ற அமித்ஷாவிடம் நேரில் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

அமித் ஷாவுடனான  சந்திப்புக்கு பிறகு மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

மேற்கு வங்கத்தில் இந்திய குடிமக்களின் தேசிய பதிவு குறித்து  அவர் எதுவும் சொல்லவில்லை. மேற்கு வங்கத்தில் இந்திய குடிமக்களின் தேசிய பதிவு தேவையில்லை என்ற எனது நிலைப்பாட்டை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன்.

நான் அவரிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கி உள்ளேன் அதில்  என்.ஆர்.சி.யிலிருந்து வெளியேறிய 19 லட்சம் பேரில், பலர் இந்தி பேசும், பெங்காலி பேசும் மற்றும் உள்ளூர் அசாமியர்கள் என்று அவரிடம் சொன்னேன். பல உண்மையான வாக்காளர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். இதை ஆராய வேண்டும். அதிகாரப்பூர்வ கடிதத்தை சமர்ப்பித்து உள்ளேன் என கூறினார்.

Next Story